Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 17 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
கடந்த 07 மாதங்களாக எதுவித கொடுப்பனவுமின்றி சேவையாற்றிவரும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி கணினி உதவியாளர்களின் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று (17) ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணினி உதவியாளர்கள், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதன்போது ஊர்வலமாகச் சென்ற அவர்கள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷ்னி ஸ்ரீகாந்த்திடம் மகஜரையும் கையளித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் கடமையாற்றுவதற்கு 59 சமுர்த்தி கணினி உதவியாளர்கள், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டதாகவும் மூன்று மாதங்கள் பயிற்சி வழங்கப்பட்டு, நியமனத்துக்குள் உள்வாங்கப்பட்ட நிலையில், இதுவரையில் தமக்கான சம்பளம் வழங்கப்படவில்லையெனவும், அவர்கள் தெரிவித்தார்.
வாகரை தொடக்கம் துறைநீலாவனை வரையிலான சமுர்த்தி வங்கிகளுக்கு இந்த சமுர்த்தி கணினி உதவியாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், தாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியிலேயே தினமும் கடமைக்குச் சென்றுவந்ததாகவும் அவர்கள் தெரிவித்தார்.
எனவே, தமது சம்பளப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
01 May 2025