Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 13 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
பொலிஸாரினால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையம் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சம்மாந்துறை வாழ் பொதுமக்களே !
எரிபொருள் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தலைமையில் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் , நீர்ப்பாசன பொறியியலாளரின் பங்குபற்றுதலுடன் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதன் படி கடந்த வருடங்களைப் போன்று தேவையான தேவையான எரிபொருள் தங்களுக்கு கிடைப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் .
எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக மக்களின் நீண்ட வரிசை காணப்படுகின்றது . இதற்கு காரணம் சிலர் எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது .
எனவே பொலிஸாரினால் திடீர் சோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு எரிபொருள் பதுக்கி வைத்திருப்போர்கள் சம்மந்தமாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் .
இச் சோதனையின் போது கைப்பற்றப்படும் எரிபொருள் அரச உடமையாக்கப்படுவதுடன் உரிய நபருக்கு எதிராக பாவனையாளர் அதிகார சபையூடாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
16 minute ago
34 minute ago