Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 நவம்பர் 13 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டு ரீதியாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிகள் அனைத்தும் அடைபட்டுப்போயுள்ளதாகத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இனப்பிரச்சினை தொடர்பான இந்த விடயத்தை, சர்வதேச ரீதியாகவே அணுகவேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நாட்டில், ஜனநாயகம் இருக்கின்றதா அல்லது தனிமனித சர்வாதிகாரம் இருக்கின்றதா என்பது நீதிமன்றத் தீர்ப்பிலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட கொக்குவில் வீரமாகாளியம்மன் ஆலயத்துக்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு, இன்று (13) காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, ஸ்ரீநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டில் நல்லாட்சி ஏற்பட வேண்டுமென்றே தாம் இந்த ஜனாதிபதியைத் தெரிவு செய்திருந்ததாகவும் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும், காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படவேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் உள்ளிட்ட பல அன்புக் கட்டளைகள், ஜனாதிபதிக்கு இடப்பட்டிருந்தாகவும் தெரிவித்தார்.
எனினும், தம்மால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை, எவரிடமும் ஆலோசனை கேட்காமல், தன்னுடைய சுயவிருப்பத்தின் அடிப்படையில், பிரதமராக்கியுள்ளார் எனத் தெரிவித்த அவர், இது அரசியல் யாப்புக்கு முரணானது என்றும் ஜனநாயகத்துக்து விடுக்கப்பட்ட சவால் என்றும் தெரிவித்தார்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவிதியை, தனி மனிதனான ஜனாதிபதி தீர்மானிக்கின்றார் என்றால், இதுவே சர்வாதிகாரம் என்று சொல்லப்படுமென்றும் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தனிப்பட்ட தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படுகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய அவர், 5 வருடங்கள் பணியாற்றுங்கள் என அவர்களுக்கு, மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றனர் என்றும் ஆனால், 3 வருடங்களும் 2 மாதங்களும் முடிவடைந்திருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை, ஜனாதிபதி கலைத்திருப்பது கண்டிக்கத்தக்க விடயமென்றும் தெரிவித்தார்.
“இது தொடர்பில் நீதித்துறை என்ன சொல்லப்போகின்றது என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அதுதான் இறுதிமுடிவாக இருக்கும். அந்த முடிவு சாதகமாக அமைந்தால் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டு பெரும்பான்மையை நிரூபிப்பவர்கள் பிரதமராக வரும் வாய்ப்பு இருக்கின்றது அல்லது ஜனாதிபதி செய்தது சரியென தீர்ப்புவருமானால், ஜனவரி 5ஆம் திகதி தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இருக்கின்றது. எது நடைபெறவேண்டும் என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
14 May 2025
14 May 2025