Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 மே 08 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில், காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், இம்மாதம் 06ஆம் திகதியன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக, கொழும்பு - கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகமான 4ஆம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டாரென, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புத் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், 2018ஆம் ஆண்டு வெடி விபத்தொன்றில் சஹ்ரானின் சகோதரனான முஹமட் றில்வான் காயமடைந்து வைத்தியசாலைக்கு செல்லாமல் மறைந்திருந்து, ஒல்லிக்குளம் முகாமில் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.
அப்போது அவருக்கு மருத்துவ உதவிகள் செய்த குற்றச்சாட்டிலேயே, அரச ஸ்தாபனமொன்றில் கடமையாற்றிவரும் காத்தான்குடியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக, பொலிஸ் உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago