Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2019 மார்ச் 27 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள், மார்ச் 31 முதல் ஏப்ரல் 15 வரை சாய்ப்புச் சட்டம் தளர்த்தப்படுவதாக, மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
அதனடிப்படையில், மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படுகின்ற அனைத்து வர்த்தக நிலையங்களையும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்து, இந்தப் பண்டிகைக் காலத்தில் கொள்வனவுகளில் ஈடுபடப் பொதுமக்களுக்கு வசதியளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பலசரக்குக் கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படல் வேண்டும் என்று வர்த்தக சங்கத்தினரும் மாநகர சபையும் இணைந்து எடுத்த தீர்மானத்துக்கு ஏற்ப ஆதரவு நல்கி வரும் வர்த்தகர்களுக்கு, மேயர் நன்றி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago