Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுபான்மை சமூகத்தின் பெண்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரான திருமதி சார்ள்ஸ், இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பதவியுயர்வு பெற்றுள்ளதை பார்க்க வேண்டியுள்ளதாக, பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினருமான திருமதி சல்மா ஹம்சா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“திருமதி சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேல் கடமையாற்றியுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வறுமையை போக்குவதற்கும் போதைப்பொருள் பாவனையில் இருந்து மட்டக்களப்பை மீட்பதற்கும் பாடுபட்டுள்ளார்.
“இன,மத மற்றும் சாதி சமயங்களுக்கப்பால் சமூக நல்லிணக்கத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதிலும் சமூகங்களை ஒன்றிணைப்பதிலும் சார்ள்ஸின் பங்களிப்பு அதிகமாகும்.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றக் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் ஏனைய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை திருமதி சார்ள்ஸ், முன்நின்று சிறப்பாக செய்துள்ளார்.
“நேர்மையான துணிச்சலான ஒரு பெண்ணாக காணப்பட்டதுடன் அவரின் திறமைக்கும் நல்ல மணப்பாங்குக்கும் கிடைத்த மிகப் பெரிய உயர் பதவியாக இந்தப் பதவியை நாங்கள் பார்க்கின்றோம்.
“அத்தோடு, சிறுபான்மை சமூகத்தின் பெண்களுக்குக் கிடைத்த கௌரவமாக அவரின் பதவியுயர்வை பார்ப்பதுடன், சிறுபான்மை சமூகங்களில் பெண்களுக்கு நல்லதொரு சிறந்த உதாரணமாகவும் திருமதி சார்ள்ஸ் விளங்குகின்றார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .