2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சிகையலங்கார நிலையங்களை திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கை

Editorial   / 2020 மே 01 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வ.சக்தி 

ஊரடங்கு தளர்த்தப்படும் போது, சிகையலங்கார நிலையங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்புத் தொகுதி சிகையலங்கார சங்கத்தின் தலைவர் தம்பையா இராசலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் உத்தரவின்படி, சிகையலங்கார நிலையங்களை மார்ச் மாதம் 17ஆம் திகதி தொடக்கம் மூடி வைத்துள்ளதாகல் வருமானமின்றி  பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் எவ்வித நிவாரணங்களும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடக வளங்கள், ஆய்வுகளுக்கான நிலையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள்களில், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி, சிகையலங்கார நிலையங்களை திறந்து எமது தொழில் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம். ஆயினும், தற்போது அரசாங்கம் மறு அறிவித்தல் வரை சிகையலங்கார நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்திய பின் நாங்கள் கடைகளை மூடிவிட்டோம். அன்றில் இருந்து இன்று வரை எமக்கான வருமானம் எதுவும் இல்லை. 

“எமது தொழில் நிலையங்களை மூடி வைத்துள்ள நிலையில், வேறு சில சிகையலங்காரம் செய்யும் நபர்கள், தனிப்பட்ட முறையில் கிராமங்களுக்குள் சென்று சுகாதாரமற்ற முறையில் சிகையலங்கார தொழிலை மேற்கொள்கிறார்கள். இதனால் இதுவும் ஒரு பிரச்சினையாக உள்ளது. 

“இருந்தபோதும் நாங்கள் சுகாதார முறைகளை பின்பற்றி எமது சிகையலங்கார நிலையங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும்” என அவர் மேலும் கோரிக்கை விடுத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X