Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 30 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்ற சிங்கலே அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“இலங்கையில் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்ற 'பிக் மீ' என்கின்ற நிறுவனம், மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரிக்கு பெரும் தொகைப் பணத்தை அன்பளிப்பு செய்துள்ளதாகப் பொய்யான தகவலொன்று இனவாத அடிப்படையில் பரப்பப்பட்டு வருகின்றது.
“’சிங்கலே’ என்கின்ற இனவாத அமைப்பின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இது தொடர்பான திரிவுபடுத்தப்பட்ட செய்திகள், படங்களை அது வெளியிட்டுள்ளது.
“'பிக் மீ' நிறுவனத்துக்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கும் எந்தவிதி தொடர்பும் கிடையாது. அவ்வாறு எந்த நிதியுதவிகளும் வழங்கப்படவுமில்லை. சிங்கலே அமைப்பால் திட்டமிட்ட ரீதியில் இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு, பெரும்பான்மை மக்களைக் குழப்ப முற்படுகின்றது.
“மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி தொடர்பில் தொடர்ந்தும் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்ற சிங்கலே, நேற்று முன்தினம் (28) தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது.
“அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படம் திரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடொன்றை மேற்கொண்டு, சிங்கலே அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றோம்” எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago