2025 மே 15, வியாழக்கிழமை

‘சிறுபான்மையினருக்கு காவலரண்கள் அவசியம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 04 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழம்பிப் போயிருக்கின்ற தற்போதைய அரசியல் நகர்வுகளை, சிறுபான்மை மக்கள் மிக அவதானமாகக் கவனித்து, அதற்கான காவலரண்களை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகுமென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார்.

தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக அவர் இன்று(04) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சியதிகார அரசியல் குழப்பங்களுக்கு அப்பால் சிறுபான்மைக் கட்சிகள், தேர்தல் முறைபற்றி கவனம் செலுத்த வேண்டும்

“அரசியல் ஆட்சியதிகார மாற்றங்கள் எது நடந்தாலும், அது ஜனநாயக அடிப்படையில் எது உண்மையோ, நியாயமோ, தர்மமோ அதன் அடிப்படையில் இடம்பெறவேண்டுமென்ற நம்பிக்கை ஊட்டக் கூடியதான அரசியல் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

“இதனிடையே, தற்போது வீசத் தொடங்கியிருக்கும்  அரசியல் சூறாவளியில் அகப்பட்டு சிறுபான்மை சமூகங்கள் யதார்த்தத்தை மறந்து சிதறுண்டு விடக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .