Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஒக்டோபர் 05 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் குர்ஆன் மதரசாவொன்றிலிருந்து அபாயா அணிந்திருந்த பெண்ணொருவர் ஆறு வயதான சிறுவன் ஒருவனை அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் துரிதமாக விசாரணைகளை நடாத்தி வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வீடொன்றில் இடம் பெற்று வரும் மக்தப் எனப்படும் குர்ஆன் மதரசாவில், செவ்வாய்க்கிழமை (03) மாலை, அங்கு குர்ஆன் கற்பதற்காகச், சென்ற சிறுவன் ஒருவனை அங்கு சென்ற முக மூடி அணிந்திருந்த பெண்ணொருவர் அழைத்துச் சென்றுள்ளார்.
அபாயா அணிந்து முகத்தை மூடிய பெண்ணொருவர் குறித்த மதரசாவுக்கு சென்று அந்த மதரசாவை நடத்தும் பொறுப்பாசிரியையிடம் சிறுவனின் பெயரைக் கூறி அவரை அனுப்புமாறு கேட்டுள்ளார்.
குறித்த சிறுவனை இரத்தப் பரிசோதனை செய்வதற்காக, அழைத்துச் செல்லப் போகின்றேன் எனவும் தான் சிறுவனின் மூத்தம்மா என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சிறுவனின் மதரசா அடையாள அட்டை மற்றும் சிறுவனின் பை என்பவற்றை அங்கு வைத்து விட்டு அந்த சிறுவனை முகத்தை மூடிய அந்தப் பெண் அழைத்துச் சென்றுள்ளார்.
இதேவேளை, குர்ஆன் மதரசாவின் பொறுப்பாசிரியை, சிறுவனின் தாய்க்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி உங்கள் மகனை மூத்தம்மா வந்து அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.
அப்படி அங்கு மூத்தம்மா யாரையும் தான் அனுப்ப வில்லை எனக்கூறி, பதற்றமடைந்த அந்த சிறுவனின் தாய், மதரசாவுக்கு தன்னுடைய மற்றுமொரு மகனை அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், காத்தான்குடி ஆறாம் குறிச்சி டீன் வீதியில் குறித்த சிறுவனை, அபாயா அணிந்த அந்த இனம் தெரியாத பெண், சில்லறைக்கடை ஒன்றில், இனிப்பு பண்டம் வாங்கிக் கொண்டு நிற்பதை அவதானித்த சிறுவனின் சகோதரர் தனது சகோதரனைக் கண்டு அழுது சப்தமிட்டுள்ளார்.
இதனையடுத்து, அச்சிறுவனை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இனந்தெரியாத அந்தப் பெண், முச்சக்கர வண்டியொன்றில் ஏறி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் சிறுவன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் சிறுவனின் தாய் மற்றும் சிறுவன் ஆகியோர் காத்தான்குடி பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை துரிதமாக நடாத்தி வருவதுடன், இது தொடர்பில் பலரிடமும் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துமுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago