2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிவானந்தாவில் கண் பரிசோதனை முகாம்

Editorial   / 2018 மே 01 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில், இரண்டாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம், இன்று (02) காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

இதில் பங்குபற்றி, தமது பிள்ளைகளின் கண்களைப் பரிசோதித்துப் பயன்களைப் பெற்றுக் கொள்ளுமாறு, ஏற்பாட்டாளர்களான சிவானந்தா, விவேகானந்தா மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையின் சிறந்த கண் சத்திரசிகிச்சை நிபுணர் பூ. சிறிகரநாதன் தலைமையிலான குழுவினர், இம்முகாமை நடத்தவுள்ளனர்.

கண்பரிசோதனை நடத்தப்பட்டு கண் குறைபாடு உடைய மாணவர்களுக்கான, இலவச மூக்குக் கண்ணாடிகளை மாணவர் ஒன்றியத்தின் மூலமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் ரி. யசோதரன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X