2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அபிவிருத்திப் பணிகள் அங்குரார்ப்பணம்

Editorial   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சீன அரசாங்கத்தின் 234 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை, சுகாதார போஷணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, இன்று (10) அங்குரார்ப்பணம் செய்தார்.

இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானாவின் அழைப்பின்பேரில், சுகாதார போஷனை மற்றும்  சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், மாகாண சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் எம்எஸ் சுபைர், மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிதியின்மூலம், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நவீன வசதிகளைக்கொண்ட நோயாளர் விடுதி, மகப்பெற்று விடுதி, இரத்த வங்கி, சத்திர சிகிச்சைக்கூடம், ஆரம்ப சிகிச்சைப் பிரிவு என்பன  அமையப்பெறவுள்ளன.

மூன்று மாடிகளைக் கொண்டதாக இக்கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X