Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் 13 வைத்தியசாலைகளை அனைத்து வசதிகளுடனும் நவீனமயப்படுத்தி, மேம்படுத்தும் பொருட்டு, சீனா அரசாங்கத்தின் 85 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள திட்டத்தில், ஏறாவூர் ஆதார வைத்தியசாலை உள்ளீர்க்கப்பட்டுள்ளது.
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா விடுத்த வேண்டுகோளையேற்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இது தொடர்பான கள ஆய்வுகளுக்காக, சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு, அடுத்த வாரமளவில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதாகவும் நிர்மாணப் பணிகளை, ஜூலை மாதம் தனது தலைமையில் ஆரம்பித்து வைப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தன்னிடம் உறுதியளித்திருப்பதாக, இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.
இதன்பிரகாரம், ஏறாவூர் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, கிளினிக் தொகுதி, விடுதிகள், மகப்பேற்றுப் பிரிவு, மருந்துக் களஞ்சியம், தொற்றா நோய்ப் பிரிவு, இரத்த சுத்திகரிப்பு மத்திய நிலையம், ஆய்வு கூடம், சத்திர சிகிச்சைக் கூடம், அவசர சிகிச்சைப் பிரிவு என்பன நவீனமயப்படுத்தப்படவுள்ளதுடன், 30 மில்லியன் டொலர் பெறுமதியான வைத்திய உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago