Princiya Dixci / 2021 ஜூன் 04 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவாக்கேணி பிரதான வீதியில், சீமெந்து ஏற்றிவந்த டிப்பர் ஒன்று, நேற்று (03) மாலை விபத்துக்குள்ளாகியது.
திருகோணமலையில் இருந்து நிந்தவூர் பிரதேசத்துக்கு சீமெந்து ஏற்றி செல்லும் போது டிப்பர் வாகனத்தின் டயர் வெடித்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இதன்போது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்ஸுடன் டிப்பர் மோதி, வீதியோரத்தில் இருந்த பனை மரத்திலும் மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025