Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 21 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்கள், இன்று (21) காலை மேற்கொண்டிருந்த கவனயீர்ப்புப் போராட்டம், பணிப்பாளரின் உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டது.
வைத்தியசாலைக்கு கடமைக்கு வந்த சுகாதார உதவியாளர்கள், கடமை நேரம் தவறி வருகைதந்ததன் காரணமாக கையொப்பம் இடும் புத்தகம் முடிவுறுத்தப்பட்ட நிலையில், சுகாதார உதவியாளர்கள் அதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
தாங்கள் பொலன்னறுவையில் இருந்து வருகைதருவதன் காரணமாகவே நேரம் கடந்ததாகவும் அதனை கருத்தில்கொள்ளாமல் வைத்தியசாலை நிர்வாகம் நடந்துகொள்வதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
எனினும், பஸ் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நேரம் கடந்து கடமைக்கு வந்ததாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் திருமதி க.கலாரஞ்சினி தெரிவித்தார்.
அதிகளவானோர் பொலநறுவையில் இருந்துவருகைதருவதன் காரணமாக, போக்குவரத்து பஸ்கள் பற்றாக்குறையாகவுள்ளதாகவும் தற்போதைய சூழ்நிலையில் ஏனைய போக்குவரத்துச் சேவைகளும் நடைபெறாத நிலையில் உரிய நேரத்திதுக்கு கடமைக்கு வருகைதரமுடியாத நிலையுள்ளதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கவனத்தில்கொண்ட பணிப்பாளர், இலங்கை போக்குவரத்துச் சபையுடன் தொடர்புகொண்டு, மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதாகவும் இனிவரும் காலங்களில் நேரத்துக்குச் சமுகமளிக்குமாறும் தெரிவித்ததைத் தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.
27 minute ago
38 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
38 minute ago
50 minute ago