2025 மே 01, வியாழக்கிழமை

சுகாதார வைத்திய அதிகாரிகள் இடமாற்றம்

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு  பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் கீழ். சுகாதார வைத்திய அதிகாரிகள் இருவர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வழமையான உள்ளக இடமாற்றமாக இது அமைந்துள்ளது.

அதன்படி, ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரியாக இதுவரை கடமையாற்றிய வைத்தியர் எம்.எச்.எம். தாரிக், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

அதேவேளை, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவரை சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய வைத்தியர் அப்துல் மஜீத் ஷாபிறா வஸீம், ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டு, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .