Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சுதந்திரமான, நீதியான தேர்தலை நடத்த உத்தரவாதப்படுத்த வேண்டும்” என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், காத்தான்குடியில் பொலிஸார் மிகவும் அசமந்தமாக நடந்து கொள்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டையும் அவர் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, இன்று (06) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் தெரிவித்ததாவது,
“எமது வேட்பாளர்களில் ஒருவரின் வீட்டில் இன்று குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண குண்டாகத் தாக்குதலாகத் தெரியவில்லை. மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
“கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில், வேட்பாளர், வீட்டில் நுழைகின்ற நேரத்தைப் பார்த்து, இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிகின்றது.
“தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விதத்தையும் இது ஏற்படுத்தியுள்ள சேதத்தையும் பார்க்கின்ற போது, இது உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு கொலை முயற்சியாகத்தான் எங்களுக்குத் தெரிகின்றது.
“இந்த வன்முறைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதனை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான சம்பவங்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படல் வேண்டும்.
“கடந்த சில தினங்களுக்கு முன்னரும், ஏனைய கட்சி வேட்பாளருடைய அலுவலகம் எரியூட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அதேபோன்று, இன்னும் சில சம்பவங்களும் நடந்துள்ளன.
“இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்குப் பாரிய பங்களிப்பிருக்கின்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, காத்தான்குடி பொலிஸாருடைய நடவடிக்கைகள் மிகவும் அசமந்தமான நிலையில் இருப்பதை நாங்கள் பார்க்கின்றோம்.
“எஞ்சியிருக்கின்ற நாட்களிலாவது, தமது கடமைகளைப் பொலிஸார் முறையாக செய்ய வேண்டும். முறைப்பாடுகள் கிடைக்குமிடத்தது விரைந்து செயற்பட வேண்டும் பாரபட்சமற்ற வகையில், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட வேண்டும்” என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளரும் வேட்பாளருமான எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி, வேட்பாளர்களான ஹில்மி அஹமட் லெவ்வை, ஏ.எம்.பர்சாத், முன்னணியின் முக்கியஸ்தர் ஏ.ஜி.எம்.ஹாறூன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
2 hours ago
2 hours ago