2025 மே 02, வெள்ளிக்கிழமை

சுரங்கப் பணியகத்தின் பிராந்திய அலுவலகம் திறந்து வைப்பு

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பழுலுல்லாஹ் பர்ஹான்

மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கிவரும் புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் மட்டக்களப்பு பிராந்திய புதிய அலுவலகம், இல. 151/1ஏ, புதிய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு எனும் முகவரியில், இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.

புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் பிராந்திய பொறியியலாளர் எம்.ஆர். எம் .பாரீஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், பிரதம அதிதியாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர்  அனுர வல்பொல கலந்துகொண்டார்.

தொடர்ந்து நிகழ்வின் பிரதம அதிதியும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவும் நாடா வெட்டி, உத்தியோகபூர்வமாக அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இந்தப் புதிய அலுவலகத் திறப்பு விழாவில், பொலிஸார், சுற்றாடல் அதிகாரிகள், புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X