2025 மே 14, புதன்கிழமை

சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் விலங்கறுமனையை பராமரிக்க இணக்கம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஜனவரி 23 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில், ஏறாவூர்ப்பற்று, ஐயன்கேணிப் பகுதியில் அமைந்துள்ள விலங்கறுமனையைப் பராமரிக்க, ஏறாவூர் நகர சபையும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையும் இணக்கம் கண்டிருப்பதாக, அச்சபைகளின் செயலாளர்கள் தெரிவித்தனர்.

ஐயன்கேணிப் பகுதியில் விலங்கறுமனை அமைந்துள்ள சூழலையும் அங்கு சமீபத்திய வெள்ளத்தால் குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் கண்டறியும் விஜயமொன்றை, ஏறாவூர் நகர மேயர், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், நேற்று (22) மேற்கொண்டிருந்தனர்.

இது குறித்து நிலைமையைப் பார்வையிட்ட பின்னர், மேற்படி விலங்கறுமனையை பராமரிக்க ஏறாவூர் நகர சபையும் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபையும் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாக, ஏறாவூர் நகர மேயர் இறம்ழான் அப்துல் வாஸித், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் நாகமணி கதிரவேல் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த உடன்பாட்டின்படி, விலங்கறுமனையின் கண்காணிப்பு, பாதுகாப்பு, ஊழியர் பகிர்ந்தளிப்பு, வரி அறவீடு உள்ளிட்ட விடயங்கள் இணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .