Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 13 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
தேசிய ரீதியான செயற்றிட்டங்களை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான பூரண அதிகாரங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனுக்கு (அமல்) வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி நியமனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக, ஜனாதிபதியால், நேற்று (12) வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிராம சக்தி, சிறுநீரக நோய்த்தடுப்பு, தேசிய போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர் பாதுகாப்பு, தேசிய உணவு உற்பத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, நிலைபேறான அபிவிருத்தி, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா போன்ற தேசிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மக்களின் இயல்பு நிலையை கருத்தில்கொண்டு, மேற்படிச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்காகவே, வியாழேந்திரன் எம்.பி, ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் செயற்றிட்டங்கள் யாவும், ஜனாதிபதி செயலகத்தால் தேசிய ரீதியாகத் துரிதமாக அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வியாழேந்திரனிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago