2025 மே 07, புதன்கிழமை

சேவைகளை இலகுபடுத்த இலத்திரனியல் பதிவுத் துண்டு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதியின் எண்ணக்கருவில், அரச அலுவலகங்களின் சேவைகளை மக்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் சேவை பெறுவதற்காக வரும் மக்களின் சேவைகளை இலகுபடுத்தும் வகையில், சேவைகளைப் பதிவு செய்து, இலத்திரனியல் பதிவுத் துண்டு வழங்கும் வேலைத்திட்டம், இன்று (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜீத் வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மக்களின் சேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனில் குறித்த துண்டை மீள அலுவலகத்தில் வழங்கும் பட்சத்தில், சேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிய முடியும்.

செயலகத்தில் உள்ள சேவை வழங்கும் பிரிவில் சேவைகள் திறம்பட மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை அறிந்துகொள்வதற்கு குறித்த இலத்திரனியல் பதிவுத் துண்டு வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், அரச அலுவலகத்தில் திறம்பட வேலைகள் இடம்பெறுகின்றன என்பதை பொதுமக்கள் அறியும் வகையில், இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X