2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சோளம் செய்கையாளர்களுக்கு அரசு உதவுமா?

A.K.M. Ramzy   / 2020 மே 08 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கிற்கு மத்தியிலும் விவசாயிகள் தமது அறுவடை நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் விவசாயிகள் பெரும் நஷ்டங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை அதிகளவிலான விவசாயிகள் சோளம் செய்கையினை முன்னெடுத்த நிலையில் அதனை அறுவடைசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் வழங்கிய மானிய உதவிகளைக்கொண்டு இம்முறை அதிகளவில் சோளம் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இம்முறை சோளம் நல்ல விளைச்சலை தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லரிப்பு பகுதியில் அதிகளவான விவசாயிகள் சோளம் செய்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்கள் தங்களது அறுவடையினையும் ஆரம்பித்துள்ளனர்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான், ஏறாவூர்ப்பற்று, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் சோளம் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

என்னும் தாங்கள் அறுவடை செய்யும் சோளத்தினை அதிகவிலைக்கு வழங்கமுடியாத நிலையிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சிறிய வியாபாரிகள் குறைந்த விலையிலேயே தமது சோளத்தினைப்பெற்றுச்செல்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 தமது உற்பத்தி பொருள்களை அரசாங்கம் கொள்வனவுசெய்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்  எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X