2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

நல்லாட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் முறையான வகையில் நடாத்தப்படும் வகையில் முறையான கணக்காய்வுகளை மேற்கொள்வது தொடர்பிலான விசேட அறிவுறுத்தல்  தொடர்பான செயலமர்வு நேற்று திங்கட்கிழமை  மட்டக்களப்பில் நடைபெற்றது.

இலங்கை கணக்காய்வாளர் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் இணைந்து இந்த செயலமர்வினை நடாத்தியது.

இந்த செயலமர்வில் இலங்கை கணக்காய்வாளர் நாயகம் எச்.எம்.காமினி விஜயசிங்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் எம்.எஸ்.அபயகுணர்வத்தன, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளா திருமதி ஜே.முரளிதரன் உட்பட மூன்று மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் கணக்காளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நல்லாட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஊழல் அற்ற முறையில் வேலைத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் மேற்கொள்ளப்படவேண்டிய முறைகள் தொடர்பில் இங்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

கடந்த கால செயற்பாடுகளினால் நாடு எதிர்நோக்கிய பின்னடைவுகள் அவற்றில் இருந்து மீள் எழுச்சிபெறுவதற்கான அதிகாரிகளின் பங்குபற்றல்கள் குறித்த கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டும் வேலைத்திட்டங்களின்போது அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றிற்கான வழிமுறைகள் தொடர்பிலும் இங்கு கருத்துகள் பரிமாறப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X