2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிறுமிக்கு சூடு; தந்தையும் வளர்ப்புத்தாயும் கைது

Suganthini Ratnam   / 2016 மார்ச் 13 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையையும் வளர்புத்தாயையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வசிக்கும் சிறுமியொருவருக்கு அவரது செவிலித்தாய்   நெருப்பால் சூடு வைத்ததாகவும் இதனால், அவரது உடம்பில் எரிகாயம் காணப்படுவதாகவும் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (11) தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சிறுமியின் வீட்டுக்குச் அவரை விசாரித்ததுடன், சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத்தாயிடமும் விசாரணை செய்தனர்.

இந்நிலையில், சிறுமியையும் சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தமக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் விசாரணை செய்து மேற்படி இருவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சிறுமியின் தாய் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.  இதன் பின்னர், சிறுமியின் தந்தை மற்றுமொரு திருமணம் செய்த நிலையில் முதல் மனைவியின் இரண்டு பிள்ளைகளும் வளர்ப்புத்தாயிடம் வளர்ந்து வந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X