2025 மே 15, வியாழக்கிழமை

ஜனவரி. 02 வரை வகுப்புகளுக்குத் தடை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி, நகர சபைக்குட்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வரை பாலர் பாடசாலைகள், பிரத்தியேக கல்வி நிலையங்கள், அல்குர்ஆன் பாடசாலைகள் என்பவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை நாள்களை, மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி சுகாதார வைத்தியர் அலுவலகம் ஆகியன இணைந்து இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இதனை மீறும் கல்வி நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர், சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் காலங்களில் பிரத்தியேக வகுப்புகள், அல் குர்ஆன் பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பில், கவனம் செலுத்தவுள்ளதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், மீண்டும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி திறப்பதற்கு முன்பாக குறித்த, கல்வி நிலையங்களைச் சுத்தம் செய்து, பொதுச் சுகாதார பரிசோதகர்களைக் கொண்டு அவைகளைப் பரிசோதனை செய்த பின்னர் அவர்களால்,டெங்கு நுளம்பற்ற இடங்கள் என உறுதிப்படுத்திய பின்னர், திறக்க வேண்டும் எனவும் அவர், மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .