2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘ஜனாதிபதித் தேர்தலில் ஒருமித்த குரலை ஏற்படுத்தவேண்டும்’

வா.கிருஸ்ணா   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது,  தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, வட, கிழக்கு தொடர்பான தீர்வுத் திட்டம் உட்பட அங்குள்ள தேவைப்பாடுகள் தொடர்பில் ஒருமித்த குரலை ஏற்படுத்தவேண்டுமென, இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் வேண்டுகோள்விடுத்தார்.

தமிழ்க் கட்சிகள் பிரிந்துநிற்போமானால் எதிர்காலத்தில் வட, கிழக்கில் பாரிய பின்னடைவைச் சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்படுமெனவும் அவர் கூறினார்.

களுவாஞ்சிகுடியில் இன்று (03) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

30 வருடங்களாக உரிமைக்காகப் பல வழிகளில் போராடிய தமிழ்ச் சமூகம், எதனையும் பெறமுடியாத நிலையில் இன்று அஹிம்சை ரீதியில் போராடி வருவதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையைத் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

நியாயமான தீர்வை இராஜதந்திர வழியிலேயே பெற்றுக்கொள்ளமுடியுமெனவும் எமக்கான தீர்வை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பெரும்பான்மை சமூகம் ஒருபோதும் தரப்போவதில்லையெனவும் அவர் கூறினார்.

எனினும், தற்போதுள்ள சூழ்நிலையை எமக்குச் சாதகமான முறையில் மாற்றுவதற்கு, ஒரு தெரிவில் நாம் அனைவரும் நிற்கும்போதே, எமது சமூகத்தின் வலுவான தீர்வைப் பெற முடியுமெனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X