2025 மே 14, புதன்கிழமை

ஜனாதிபதியின் மட்டக்களப்பு வருகைக்கான ஏற்பாட்டுக் கூட்டம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 பெப்ரவரி 01 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்துக்கான கிராம சக்தி வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண மற்றும் மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதியின் தலைமையில், மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேர்பா மண்டபத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் கிழக்கு மாகாணத்துக்கான இவ்விஜயத்துடனான நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சி.பல்லேகம தலைமையில்  இன்று (01) முற்பகல் நடைபெற்றது.

இன்றைய கலந்துரையாடலின் போது, ஜனாதிபதியின் வருகை, பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்வு, நிகழ்வின்  ஏற்பாடுகள், பங்குபற்றுநர்கள், நிகழ்வொழுங்குகள், ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள பின்தங்கிய கிராமமான சத்துருக்கொண்டான் கிராமத்துக்கான விஜயம் தொடர்பான விடயங்கள் எனப் பல்வேறுபட்டவைகள் குறித்தும் ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.அசீஸ், கிராம சக்தி வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சி.டி.களுவாராச்சி, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியபதி கலபதி, ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இணைப்புச் செயலாளர் டொக்டர் கோல்டன் பெர்ணான்டோ, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா உதயகுமார், திருகோணமலை மாவட்டச் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ஆகியோரும் பங்குகொண்டனர்.

அத்துடன், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், முப்படைகளின் அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

பெப்ரவரி 08ஆம் திகதி, மட்டக்களப்பில் நடைபெறும் ஜனாதிபதியின் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களின் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமசக்தித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான சமர்ப்பண விளக்கமளித்தலுடன் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த மாநகர சபைகள், உள்ளூராட்சிச் சபைகளின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், பொதுமக்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X