Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு 7 நாள்களுக்குள் தீர்வு தருவேன் என்ற ஜனாதிபதியின் உத்தரவாதம், இன்று புஸ்வானம் ஆகிவிட்டதென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில், எடுத்ததற்கெல்லாம் நீதிமன்றத்தை நாடுகின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆரோக்கியமற்ற இத்தகைய நிலைமைகள் தொடர்ந்து நீடிப்பதைத் தவிர்த்து, விட்டுக்கொடுப்புகள் ஊடாகத் தீர்க்கமான ஒரு முடிவை, அனைத்து அரசியல் தரப்புகளும் எட்டவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமைக்கு நீதிமன்றத் தீர்ப்பு மாத்திரம் நிரந்தரமான தீர்வைத் தரும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாவிடினும், நிலைமையை சுமூகமாக்க இது உதவும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இத்தீர்ப்பு காலதாமதமாவது நாட்டின் ஆட்சி, அதிகார, நிர்வாக நடைமுறைகளில் மேன்மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தச் செய்வதால் பொதுமக்களே பெரிதும் பாதிப்படைவர்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தேக்கமுற்றுள்ள நிர்வாக நடைமுறைகள் காரணமாக, நாளாந்தம் தேசிய பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும் இதனால் மாகாண, மாவட்ட மட்டங்களில் அபிவிருத்திப் பணிகளில் தேக்க நிலைமைகள் எற்பட்டுள்ளனவென்றும் நஸீர் அஹமட் கவலை தெரிவித்தார்.
மேலும், இது எமது சர்வதேச பொருளாதார மட்டத்திலும் பெரும் பாதகத்தை எற்படுத்தி வருகின்றதாகத் தெரிவித்த அவர், ஆட்சியாளர்கள் அற்ற நாடாக இலங்கை இருப்பதை, ஜனநாயகத்தின் உயர் அதிகாரங்கள் தொடர்ந்தும் அனுமதிக்கப் போகின்றனவா எனவும் கேள்வியெழுப்பினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago