2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவும்’

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம்

ஜெனீவாவில் தற்போது கொண்டுவரப்பட்ட 40/1 தீர்மானத்தை, அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுத்தினார்.

10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வைபவத்திலேயே அவர் இவ்வாறு வலியுத்தினார்.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீடித்து நிலைத்திருக்கும் அரசியல் தீர்வு விரைவாக கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலே, இந்த அரசாங்கத்துக்குத் தாங்கள் ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர்  தெரிவித்தார்.

கடந்த காலத்தில் நல்லாட்சியை ஏற்படுத்துவற்கு கிழக்குத் தமிழ் மக்கள் அதிகளவு ஆதரவை வழங்கியுள்ளார்கள் எனவும் அவர்களுக்குக் கூடியளவான சேவைகளைப் பிரதமர் வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கைக்குவரும் வெளிநாட்டுத் தூதுவர்களும் அதிகாரிகளும், வடமாகாணத்தை நோக்கியே செல்கின்றார்களே தவிர, கிழக்கு மாகாணத்துக்கு வருவது மிகக் குறைவாகும் எனத் தெரிவித்த யோகேஸ்வரன் எம்.பி, கிழக்குத் தொடர்பில் அதிக கரிசனையை கொள்ளவேண்டும் என, பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X