2025 மே 14, புதன்கிழமை

டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த பாரிய நடவடிக்கை

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் டெங்கு பரவும் நான்காவது மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த, சுகாதார அமைச்சு பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட சுகாதாரத் திணைக்களத்துடன் இணைந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புப் பெருக்கம் அதிகமாகவுள்ள இடங்களாக இனங்காணப்பட்ட நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைத் தெரிவு செய்து, அப்பகுதிகளில்  நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைய, செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையுடன்,  மட்டக்களப்பு மாநகர சுகாதாரப் பிரிவு இணைந்து, நாவக்கேணி சுகாதாரப் பிரிவில் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கு, நுளம்பு வலைகளும் கிணறுகளுக்கான வலை மூடிகளும், கண்ணகி வித்தியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சுகாதாரப் பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகர் கே.ஜெய்சங்கர் ஒழுங்கமைப்பில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் கந்தசாமி சத்தியசீலன் அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .