2025 மே 14, புதன்கிழமை

டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

வடிவேல் சக்திவேல்   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுவாஞ்சிகுடி நியூ ஒலும்பிக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், மாபெரும் டெங்கொழிப்பு செயற்றிட்டம் ஒன்று, களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று (02) முன்னெடுக்கப்பட்டது.

இந்த டெக்கு ஒழிப்பு செயற்றிட்டத்தில், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கிருஷ்ணகுமார் தலைமையிலான பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினர், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் தலைமையிலான வைத்தியசாலை குழுவினர், பிரதேச சபை உறுப்பினர் தலைமையிலான பிரதேச சபை  ஊழியர்களை கொண்ட குழுவினர், அம்கோணர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தலைமையிலான குழுவினர் நியூ ஒலும்பிக் விளையாட்டு கழத்தின் தலைவர் புருசோத்மன் தலைமையிலான கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வீடுகள், ஆலயங்கள், முன்பள்ளி பாலர் பாடசாலைகள் போன்றவற்றில் அமையப் பெற்ற கிணறுகள் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நுளம்பு உருவாகக்கூடிய கிணறுகளுகளை இனங்கண்டு, கிணறுகளை மூடுவதற்கான வலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

​அத்துடன், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினரால், கிணறுகளுக்குள் விடுவதற்கான மீன் குஞ்சுகளும் வழங்கப்பட்டன.

இந்நடவடிக்கையின்  போது நூற்றுக்கணக்கான இடங்கள் சோதனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X