2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

டெங்கு குறித்து அவதானமாக இருக்கவும்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

எதிர்வரும் காலத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம்  அதிகரிக்கலாம் என்பதால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டியுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மக்களின் சுகாதாரமான பழக்கவழக்கங்கள் ஊடாக கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் டெங்குத் தாக்கத்தைக் கட்டுப்படுத்தமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசும் சுகாதார திணைக்களத்தினரும் டெங்கு கட்டுப்பாடு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். நீர் தேங்கிக் காணப்படும் இடங்களை வீடுகளில் கன்டால் உடனடியாக துப்புரவு செய்து, நீர் தங்காத வகையில் சீர்செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள், வயோதிபர்கள் மற்றும் ஏனையோரின் பாதுகாப்புக் கருதி, வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த அலுவலகங்கள், பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், பொதுச் சந்தைகள் மற்றும் பொது இடங்கள் அனைத்தும் துப்புரவுக்குட்படுத்திய பின்னரே மக்கள் பாவனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X