2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கை

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 மே 31 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் ஆலோசனைக்கமைய  சுகாதார சேவைகள்  திணைக்களம் தீவிர நடவடிக்கைகளை தற்போது எடுத்துவருகின்றது.

இதற்கமைய  அரச பணியார்களை இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தும் பொருட்டு விழிப்பூட்டும் செயலமர்வொன்று நேற்று (30 ) பகல் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர். திருமதி கிரேஸ் நவரட்ணராஜா, மாவட்ட தொற்றா நோய் தடுப்பு அதிகாரி  டொக்டர். கே.நவலோஜிதன்,  மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் உட்பட அரச பணியாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர் .

இக்கூட்டத்தில் இம் மாவட்டத்தின் தற்போதைய டெங்கு நோய் நிலைமைகள் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளை பற்றியும் மாவட்ட அரச பணியாளர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டதுடன் இந்தத் தடுப்பு நடவடிக்கையில் இரு தினங்கள் அரச பணியாளர்களை ஈடுபடுத்தும் பொருட்டு தேவையான  திட்டமிடல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட செயலக அரச ஊடகப் பிரிவுத் தகவல் தெரிவிக்கின்றது.

இதே வேளை இம் மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கங்கள் பற்றி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல் தருகையில் இவ் வருடத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரிபிரிவுகளில் 2876பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த வாரம் மாத்திரம் 176 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையின் பேரில், அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் அரசாங்க சேவை உத்தியோகத்தர்களின் உதவிகளையும் பெற்றுக் கொண்டு இம்மாவட்டத்தில் டெங்கு நோயை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X