Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 16 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன் , நடறாஜன் ஹரன்
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் சித்தாண்டி பிரதேசத்தில், நேற்று (15) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்துச் சம்பவத்தில், சித்தாண்டி - உதயன்மூலை, மதுரங்காட்டுக் கொலனியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான பொன்னம்பலம் தியாகராசா (வயது 54) என்பவரே உயிரிழந்தவராவார்.
இவர், மேற்படி பிரதான வீதியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, தூரப் பிரதேசப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றில் மோதுண்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த அவரை, சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை அடுத்து, விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்துள்ள ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
33 minute ago
35 minute ago