2025 மே 07, புதன்கிழமை

தனியார் வகுப்புகளை நிறுத்தக் கோரிக்கை

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரு.அனிதா

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், அறநெறிப் பாடசாலை நேரமான ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையில் நடைபெறும் தனியார் வகுப்புகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பிரதேச அபிவிருத்திசார் அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றன.                                         

மாணவர்களிடையே ஒழுக்க விழுமியத்தையும் அறநெறிக் கல்வியையும் வழங்கும் பொருட்டு, அறநெறி பாடசாலைகள் இயங்கி வருகின்றன. அறநெறிப் பாடசாலையின் முக்கியத்துவத்தைப் பலரும் கூறி வரகின்ற நிலையிலும் ஒரு சில தனி நபர்கள், குறித்த அறநெறிப் பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக, மாணவர்கள் அறநெறிப் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அபிவிருத்தி சார் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனமெடுத்து, அறநெறிப் பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகள் நடத்துவதை தடை செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X