Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜயரெத்தினம்
தமிழ் சமூகம், தங்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யமுடியாத நிலையில் இருக்கின்றது என, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்கு மாகாணத்துக்கு 65 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் இது, வடகிழக்கின் சரித்திரத்தில் கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டமாக முன்னெக்கப்படும் “கிராமத்துக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம், நேற்று (27) மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்யமுடியாத ஒரு சமூகமாக, தமிழ் சமூகம் காணப்படுவதாகவும் இலங்கையிலுள்ள சமூகங்களில் அதிகளவு அடிப்படை தேவைகளையுடைய சமூகமாக தமிழ் சமூகம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு வீடுகள் இல்லை என்றும் அதே எண்ணிக்கையானோருக்கு மலசலக்கூடங்களும் இல்லை என்றும் பலருக்கு காணிகளே இல்லை என்றும் அவர் கூறினார்.
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இருக்கின்றன என்று கூறிய அவர், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர் என்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago