2025 மே 14, புதன்கிழமை

‘தமிழர்களுக்கு நன்றி இல்லாமல் இருப்பதன் காரணமாக நிரந்தரத் தீர்வில்லை’

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழர்களுக்கு ஒரு நிரந்திரத் தீர்வு கிட்டாத ஏக்கத்துடனேயே, இந்தப் பொங்கலைத் தமிழ் மக்கள் கொண்டாடிவருவதாக, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை கவலை தெரிவித்தார்.

மட்டக்களப்பு புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று (15) காலை தைப்பொங்கல் விழா நடைபெற்றது.

ஆலயத்தின் பங்கு மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பொங்கல் விழாவில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பங்குமக்கள், அருட்தந்தையர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆயர், பொங்கல் விழா, உலகம் புராகவும் கொண்டாடப்படுவதாகவும் இந்த விழா, இறைவன் கொடுத்த விளைச்சலுக்காக நன்றி கூறுகின்ற நாளாக அமைவதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், எங்களுடைய நாட்டிலே தமிழர்களுக்கு நன்றி இல்லாமல் இருப்பதன் காரணம் இன்னும் எமக்கான ஒரு நிரந்தரத் தீர்வில்லை என்ற ஏக்கத்தோடு தான் இந்தப் பொங்கலை நாம் கொண்டாடுகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், எமக்கு ஒரு நிரந்தரத் தீர்வு எப்போது வரும் என நாம் ஏங்கிக் காத்துக்கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்த ஆயர், இந்த ஆண்டிலாவது நிலையான அமைதி, நிரந்தரத் தீர்வு, புதிய அரசமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டு, அனைத்து இன மக்களும் மகிழ்ச்சியோடு வாழக்கூடிய நல்ல நாளை, இறைவன் தரவேண்டுமென வேண்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .