2025 மே 07, புதன்கிழமை

‘தமிழர் கலாசாரங்களை அழிக்கும் முயற்சி’

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பா.மோகனதாஸ்

தொல்பொருள் திணைக்களத்தை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் திட்டமானது, வடக்கு, கிழக்கு தமிழர் பாராம்பரிய பண்பாட்டுக் கலாசாரங்களை அழிப்பதற்கான முயற்சிகளைத் தோற்றுவிக்குமென, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்புத் தொகுதி இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில், பௌத்த - சிங்கள மக்கள் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று, நாடாளுமன்றத் தேர்தலிலும் தனிச் சிங்கள அரசையும் தோற்றுவிக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்” என்றார்.

“இந்நிலையில் தற்போது தொல்பொருள் திணைக்களத்தையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதன் ஊடாக, பொதுபல சேனா கூறுவதைப் போன்று தனிச் சிங்கள அரசாக மாற்றும் முன் ஏற்பாடாக அமையும்” என்றார்.

“தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக, பல நடவடிக்கைகளை, பாதுகாப்புத் தரப்பின் மேற்பார்வையில், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாழ்விடங்களில் நினைத்ததைச் செய்யக்கூடிய ஒருநிலை இதனால் ஏற்படக்கூடும்” என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், “ஜனாதிபதி கோட்டபாய பதவி ஏற்றபின்னர், பல்வேறு திணைக்களங்கள், நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக பாதுகாப்புத் தரப்பினர் பலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தொல்பொருள் திணைக்களமும் முழுமையாக பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதால் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் கேள்விக்குறியாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X