2025 மே 19, திங்கட்கிழமை

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் முக்கியமான கட்சி’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஜனவரி 29 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, தமிழர்களின் முக்கியமான கட்சி” என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வாகனேரி வட்டாரத்தில் போட்டியிடும் த.கிருபைராசா என்பவரின் அலுவலகம் வாகனேரியில் நேற்று முன்தினம் மாலை திறந்து வைத்து உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“தமிழ் மக்களுக்காக, நாடாளுமன்றத்தினுள்ளும் வெளியிலும், சர்வதேசத்திலும் பேசிக்கொண்டிருக்கின்ற கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான். இன்று தேர்தல் என்றதும் பல கட்சிகள் இன்று எம்மக்கள் முன் வந்திருக்கின்றன.

“எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சென்ற சூரியன் சின்னம் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி காண்பது தான் வழக்கம். தமிழினத்துக்குத் துரோகம் செய்தது இந்தச் சூரியன் சின்னம் என்ற வகையில் மக்கள் இதனை நிராகரித்தார்கள்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் தானாகப் பிரிந்து சென்றார்கள். அவர்கள் இந்தச் சூரியன் சின்னத்தை ஆனந்த சங்கரியிடம் கடனாகப் பெற்று, இந்தத் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றார்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X