Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 27 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
கிழக்கு மாகாணத்திலே தமிழ் மாணவர்களின் தொகை வெகுவாகக் குறைந்து கொண்டு வருகின்றது. வருடாந்தம் முதலாம் தரத்துக்குச் சேர்க்கப்படுகின்ற தமிழ் மாணவர்களின் தொகை வெகுவாக குறைந்து கொண்டு வருகின்றது என, கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், வருடாந்தம் சில பாடசாலைகளை எடுத்துப் பார்த்தால் 20, 15, 10, 05 என மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்ற விதம் சுட்டிக்காட்டுகின்றது. இன்னும் சில காலங்களில் இவ்வாறு சென்றால் அப்பாடசாலைகளை இழுத்து மூடவேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, மாணவர்களின் தொகை அதிகரிக்கப்பட்டால்தான் எமது இருப்பையும் நாம் தக்க வைத்துக் கொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு - செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தால் நடாத்தப்பட்ட வருடாந்த புலமைப் பரிசில்கள் வழங்குதலும், கௌரவிப்பு நிகழ்வும் மேற்படி ஆலய முன்றலில் இன்று (27) அலய பரிபாலன சபைத் தலைவர் பா.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது இந்து சமயத்தைச சேர்ந்தவர்கள் நாளாந்தம் வேறு மதங்களுக்கு மாறிக் கொண்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அவதானிக்க முடிகின்றது. வாகரை, கதிரவெளி, பால்சேனை, போன்ற இடங்களிலுள்ள மக்கள் நளாந்தம் ஏனைய மதங்களுக்கு மாறிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான விடையத்தை எமது புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும். எமது சமயத்தில் சமூக நோக்குப் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கின்றது.
“தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் தெரிவுகள், கல்வியாகத்தான் இருக்கின்றது. கல்வியில் முன்னேற்றங்களைக் கொண்டு வந்தால்தான் வாழக்கையில் முன்னேற்றங்களைக் கொண்டுவரலாம்.
“நாளாந்தம் பிள்ளைகள் தொடர்பாகவும், ஆசிரியர்கள், அதிபர்கள் தொடர்பாகவும் முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்து வருகின்றன. தற்போது எமது பிள்ளைகள் வழிதவறிச் சென்றுள்ளார்கள். எனவே பெற்றோரகள் மிகவும் விழிப்புடன் இருக்கின்ற தேவை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
8 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago