Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 04 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சர் ஒருவரைப் பெற்றுக்கொள்வதற்காக, எந்தவித விட்டுக்கொடுப்பையும் செய்யத் தயாராக உள்ளதாக, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெறுவதற்கான சாத்தியம் இருக்கின்றது. இந்நிலையில், இம்மாகாணசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்;பார்க்கப்படுகின்றது. எனவே, இம்மாகாணசபைத் தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் கட்சி வேறுபாடின்றி ஒன்றுபட வேண்டும்;' என்றார்.
'மேலும், எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எமது புதிய கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி களம் இறங்கவுள்ளது. எனினும், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சர் ஒருவரைத் தெரிவுசெய்ய வேண்டும்;. அதற்காக எந்த விட்டுக்கொடுப்பையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
'இது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரையும் ஏனைய தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளேன்.
'எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் எமக்கு முக்கியமான ஒரு தேர்தல் என்பதுடன், இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
41 minute ago
48 minute ago
50 minute ago