Niroshini / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
பல தசாப்தகாலமாக இலங்கைச்சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முன்னர் உண்ணாவிரதமிருந்தபோது அரசங்கத்தினாலும் அரசியல்வாதிகளினாலும் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.எனவே இன்னும் எந்தக்காரண காரியத்தையும் கூறாமல் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
1971களில் சிறைப்பிடிக்கப்பட்ட ஜே.வி.பி.போராளிகள் மற்றும் பிரேமதாசா காலத்தில் சிறைப்பிடித்த ஜே.வி.பி. சிங்களப்போராளிகளும் பின்னர்வந்த சந்திரிகா அம்மையாரின் காலத்தில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஆனால் எந்தக்குற்றமும் செய்யாமல் பல தசாப்த காலம் சிறையில்வாடும் தமிழ்க்கைதிகள் மட்டும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. சிங்களக்கைதிகளுக்கு ஒரு நீதி தமிழ்கைதிகளுக்கு இன்னொரு நீதியா? இது பாரபட்சம்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொண்ட தீர்மானப்படி நாட்டில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அச்சட்டம் நீக்கப்படவில்லை.தீர்மானம் மீறப்பட்டுள்ளது.
எனவே, அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம், இன்றைய நல்லாட்சியில் ஜனாதிபதியினால் உடனடியாக நீக்கப்படவேண்டும்.
அத்துடன், தமிழ்க் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கமும் ஜனாதிபதியும் ஏற்று இன்னும் காலம் தாழ்த்தாது பொதுமன்னிப்பளித்து அவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
7 minute ago
8 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
28 minute ago
3 hours ago