Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில், வெட்டுப் புள்ளி குறைந்த மாணவர்கள், சித்தியடையத் தவறியவர்கள் என்று யாரையும் கருதவேண்டாம். இதில் தெரிவு செய்யப்பட்டால்தான் வைத்தியர், பொறியியலாளர், உயர் படிப்புகளைப் படிக்கலாம் என்ற கருத்து, எம்மவர் மத்தியிலிருந்து களையப்பட வேண்டும்” என, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்ஹர் நேற்று (08) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், சித்தியடையாதவர்கள் என்ற பதம் இல்லை. பல பெற்றோர்கள் இதை உபயோகித்து, தம் பிள்ளை சித்தியடையவில்லை என்று கவலையடைகின்றனர்.
பெற்றோர் மத்தியில் இருந்து இந்நிலைமையில் முதலில் மாற்றம் வரவேண்டும். அப்போதுதான் எமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு நாம் உறுதுணையாக இருப்போம் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம்தான் எமது மாணவச் செல்வங்கள், தாம் சித்தியடையவில்லை என்ற கவலையை மறந்து, தங்களின் எதிர்காலக் கல்விச் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பிப்பார்கள்”.
“பாடசாலைகளில் வருடா வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டி விழாக்கள் வைப்பது வழக்கம். இவ்விழாக்கள் நடாத்தப்படுவது பிழையில்லை. கட்டாயம் மாணவர்களும் ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டும். ஆனால், பாராட்டப்படும் முறையில் மாற்றம் வரவேண்டும்.
ஒரு வலயத்தில் வருடாந்தம் சுமார் 50 க்கு மேற்பட்ட பாடசாலைகளில் இந்த விழா எடுக்கும்போது, 50 பாடசாலை நாட்கள் அதற்காகச் செலவிடப்படுகின்றன. இவை அனைத்துக்கும் வலய கல்விப் பணிப்பாளர் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அலுவலக கருமத்திலும் பாதிப்பு, பாடசாலைகளில் நடைபெறும் கல்விச் செயற்பாடுகளிலும் பாதிப்பு ஏற்படுவதுடன், பண விரயமும் உண்டாகின்றது.
இந்தப் பாதிப்புகளில் இருந்து நாம் விடுபடுவதாக இருந்தால், இவ்விழாவைத் தனித்தனியாக நடத்தாது, கோட்ட ரீதியில் பாடசாலைகளை ஒன்றிணைத்து நடாத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன்” என்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago