Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, தளவாய்க் கிராமத்தில் புதிய பாடசாலையொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.
தளவாய் சுவாமி அஜராத்மானந்தாஜி வித்தியாலயம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடசாலையை நிர்மாணிப்பதற்கு கிழக்கு மாகாணசபை சுமார் 49 இலட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கடந்த யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தளவாய்க் கிராம மக்கள், தற்போது அங்கு மீள்குடியேறியுள்ளனர். இக்கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. இக்கிராமத்தில் பாடசாலை இல்லாததன் காரணமாக சுமார் 5 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, வேப்பவெட்டுவான் ஆகிய கிராமங்களிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் பெரும்பாலும் கால்நடையாகச் செல்ல வேண்டியுள்ளது. மேலும், காட்டுவழியாகச் செல்லும்போது, மாணவர்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்ளவும் நேரிடுகின்றது.
இந்நிலையில், தளவாய்க் கிராமத்தில் தரம் ஒன்றுக்கான 4 வகுப்பறைகளும் அலுவலகமும் கொண்டதாக இப்பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளதாக இப்பாடசாலையின் புதிய அதிபர் தருமலிங்கம் இராசானந்தம் தெரிவித்தார்.
இப்பாடசாலைக்கான கட்டடவேலை அடுத்த 3 மாத காலப்பகுதிக்குள் முடிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

12 minute ago
15 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
30 minute ago
1 hours ago