Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில், சிறுமியொருவர் (வயது 7) விழுந்து, பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (9) மாலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த அனுரஞ்சித் அனுசிரா (வயது 7) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மயிலம்பாவெளி -காமாட்சி கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியில், தாமரைத் தடாகம் அமைக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தடாகம் அமைக்கப்பட்டு வரும் பகுதியில், நேற்று (9) மாலை விளையாடிக்கொண்டிருந்த சிறுமியே, இவ்வாறு தடாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்றுத் தெரியவருகிறது.
தடாகத்தினுள் சிறுமியின் உடல் மிதப்பதைக் கண்ட அயலவர்கள், அவரை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும், சிறுமி ஏற்கெனவே, உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .