Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக சுமார் ஒன்றரை மாத வயதுடைய ஆண் சிசுவொன்று மரணித்துள்ளதாக, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் 5ஆம் குறிச்சியைச் சேர்ந்த வெற்றிவேல் ஹபினேஸ் (வயது - 70 நாள்கள்) என்ற குழந்தையே, நேற்று (13) மரணித்துள்ளது.
தனது 5ஆவது பிரசவத்தில் இரட்டை ஆண் சிசுக்களைப் பிரசவித்திருந்த தாயொருவர், சம்பவதினத்தன்று இரவு, இரட்டையர்களில் ஒருவரான சிசுவுக்குத் தாய்ப்பால் ஊட்டிய நிலையில் கண்ணயர்ந்துள்ளார்.
நள்ளிரவு நெருங்கும் வேளையில், மற்றைய சிசு அழுது கொண்டிருந்துள்ளது. அச்சிசுவுக்குப் பாலூட்ட தாயார் கண்விழித்தபோது, ஏற்கெனவே தாய்ப்பாலருந்திய சிசு வாயினாலும் மூக்கினாலும் தாய்ப்பால் வெளிவந்த நிலையில் மூர்ச்சித்துக் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிசுவை உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிசு ஏற்கெனவே மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசுவின் சடலம், உடற்கூறாய்வின் பின்னர் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது. இரட்டையர்களில் மற்றைய குழந்தை தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago