Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய பெண் ஒருவரை, பிறிதொரு மோட்டர் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள், வழிமறித்து, பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்தெடுத்து தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள துறைநீலாவணைக்கு செல்லும் பிரதான வீதியில் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.
6 அரை பவுண் கொண்ட தாலிக்கொடியே மேற்படி கொள்ளையிடப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது பெண் சத்தமிட்டதையடுத்து, உதவிக்கு வந்தவர்களால் பெண் காப்பற்றப்பட்டுள்ளார். எனினும், அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், மோட்டர்சைக்கிளும் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற கல்முனை பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025