2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திங்கள் சம்பவம்; வரலாற்றில் ஆறாத வடு

Princiya Dixci   / 2022 மே 11 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி      

நாட்டில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (09) இடம்பெற்ற சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் ஓர“ ஆறாத வடுவாக காணப்படும் என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் கோபாலசிங்கம் சுஜிகரன் தெரிவித்தார்.

அவரால், ஊடகங்களுக்கு நேற்று (10) அனுப்பி வைக்கப்பட்ட கண்டன அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   

“அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் அமைதியான முறையில் 30 நாட்களாக இடம்பெற்று வந்த போரட்டத்தை குண்டர்கள் குழப்பியமையை குறித்து இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

“ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் ஒழுங்கற்ற ஆட்சியால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் அரசாங்கத்துக்கு எதிராக மிகவும் அமைதியான முறையிலேயே காலி முகத்திடலில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

“எனினும், இவர்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில், மேற்படி கீழ்த்தரமான தாக்குதல் காரணமாக மக்கள் இன்று ஆத்திரமடைந்து நாடு முழுவதும் அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது.

“நல்லதோர் அரசியல் நிலைமையை கட்டியெழுப்ப வேண்டும் என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கம் இடித்துரைக்கின்றது. நிலமை சீராகும் வரையில் மக்களின் பக்கமாக நின்றே எமது ஆசிரியர் சங்கம் போராடும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X