2025 மே 09, வெள்ளிக்கிழமை

திடீரென மாயமாகும் மோட்டார் சைக்கிள்கள்

Freelancer   / 2022 ஏப்ரல் 29 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அஸ்வர்

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள கடற்கரையோரங்கள், தெருவோரங்கள்,  வீடுகள் மற்றும் கடை வாசல்கள், மைதானங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி இனந்தெரியாத நபர்களினால் களவாடப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்  எனவும் தமது மோட்டார் சைக்கிள்களை உரிய முறையில் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் இத்திருட்டுச் சம்பவங்களைக் கண்டுபிடிக்கும் வகையில் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X