2025 மே 02, வெள்ளிக்கிழமை

திண்மக் கழிவுகளில் எரிபொருளைப் பெற புதிய திட்டம்

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளிலிருந்து மீள் சுழற்சி மூலம் மின்சக்தி, எரிபொருள்களான பெற்றோல், டீசல் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான புதிய திட்டமொன்று  ஆராயப்பட்டு வருகின்றது.

கனடா அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் இத்திட்டம், இந்தியா ஊடாக கொழும்பு மாநகர சபையின் அனுசரணையுடன், மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட வரைவு முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முதலாக அமுல்ப்படுத்தப்படவுள்ள இத்திட்டம், மட்டக்களப்பில் பரீட்சாத்த திட்டமாக நடைமுறைப்படுத்துவது சம்மந்தமான கலந்துலையாடல், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, திண்மக் கழிவுகளிலிருந்து மின்சக்தியையும், பெற்றோல், டீசலையும் பெற்றுக் கொள்ளமுடியுமென, டபிள்யூ ரீ. டெக் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான சந்தனம் பிச்சை விளக்கமளித்ததுடன், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, மட்டக்களப்பில் இதுபோன்ற திண்மக் கழிவுகளினூடாக சக்திகளைப் பெற்றுக் கொள்ளும் இரு திட்டங்கள் வெவ்வேறு நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டு, அவை உரிய காலத்தினுள் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படாததால் கைவிடப்பட்டதாகவும், இத்திட்டம் மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென, மாநகர மேயர் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X